Rahul Gandhi's New India Episode1
Hello Friends,
Our leader Thiru.Rahul Gandhi has been advocating for a new India.
This includes a new vision for the country, a new economic model, a new form of politics, a new social justice framework and a new foreign policy doctrine. As an Indian, a Tamilian and a Congressman, I take it upon myself as a duty
to interpret, translate and articulate Rahul Gandhi’s vision for a new India to my fellow Tamilians in Tamil.
I have been working closely with Rahul Gandhi over the past several years. Hence I believe I will be able to convey his message and vision accurately and in great detail to the Tamil people.
For this purpose, I am launching a video series called “Rahul Gandhi’s New India” on his 53rd birthday June 19, 2023. This will be a series that will air a new episode at regular intervals.
I hope you will watch it and give feedback.
நண்பர்களுக்கு வணக்கம்,
நமது தலைவர் திரு.ராகுல் காந்தி மக்களுக்கான புதிய இந்தியாவிற்கான தன் தொலை நோக்கு பார்வையை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.
அவரது புதிய தொலைநோக்குப் பார்வை, நம் நாட்டிற்கான ஒரு புதிய அரசியல் வடிவம், புதிய பொருளாதார கொள்கை, புதிய சமூக நீதி கட்டமைப்பு மற்றும் புதிய வெளியுறவு கொள்கை கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. .
புதிய இந்தியாவிற்கான ராகுல் காந்தி அவர்களின் இந்த தொலைநோக்கு பார்வையை எனது சக தமிழர்களுக்கு தமிழில் விளக்கி பரப்புரை செய்வதை
ஒரு இந்தியகுடிமகனாக, தமிழனாக மற்றும் காங்கிரஸ்காரனாக என் கடமையாக கொள்கிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக நான் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறேன். எனவே, அவரது பார்வையையும், பரப்புரைகளையும் துல்லியமாகவும் மிக விரிவாகவும் தமிழ் மக்களுக்கு என்னால் தெரிவிக்க முடியும் என நான் நம்புகிறேன்.
இந்த நோக்கத்திற்காக, "ராகுல் காந்தியின் புதிய இந்தியா" என்ற வீடியோ தொடரை அவரது 53வது பிறந்தநாளான ஜூன் 19, 2023 அன்று முதல் வெளியிடுகிறேன். தொடர்ந்து சீரான இடைவெளியில் புதிய அத்தியாயங்களை தொடர்ந்து ஒளிபரப்பும் தொடராக இது இருக்கும்.
இதை பார்த்துவிட்டு, இதை மேம்படுத்த உங்கள் கருத்துக்களை தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
#HappyBirthdayRahulGandhi #incindia #raghulgandhi #indiannationalcongress #praveenchakravarty